‘கேர் எர்த்’ அமைப்பு மற்றும் ‘யாதும் ஊரே’ இணைந்து ‘உலக பூமி தினம்’ (ஏப்ரல் – 22) அன்று கிண்டி சிறுவர்கள் பூங்காவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சுற்றுச்சூழல் சார்ந்த ஓவியப் போட்டி நடத்தியது. இப்போட்டியில் சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளுர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்து 180-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
அமெரிக்க து}தரக தலைமை அதிகாரி திரு. பிலிப் மின் அவர்கள் மற்றும் தலைசிறந்த ஓவியர் திரு. கேசவ் வெங்கட்ராகவ் அவர்களும் ஓவியம் தீட்டி நிகழ்சியை தொடங்கிவைத்து தலைமைதாங்கினார்கள். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனர் முனைவர் எச். மல்லேசப்பா, இ.வ.பா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மதியம் திரைப்பட நடிகர், திரு. கார்த்தி சிவகுமார் அவர்கள் கலந்துகொண்டு மாணவ, மாணவியருடன் உரையாடி பின்னர் ஓவியம் தீட்டி ஊக்கப்படுத்தினார்.
ஓவியப் போட்டியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் 18 குழுக்களாக பிரிந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் பற்றிய வண்ண ஓவியங்களை வரைந்தார்கள். ஓவியத்தில் விழிப்புணர்வு வாசங்களையும் எழுதி அனைவரின் பார்வைக்கும் வைக்கப்பட்டது. வரைந்த ஓவியப் பலகைகள் தமிழ்நாடு வனத்துறையின் உதவியுடன் வேடந்தாங்கல், காpக்கிலி மற்றும் பழவேற்காடு பறவைகள் சரணாலயங்களில் மற்றும் கிண்டி சிறுவர் பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.